நெல்லையில் பிறந்த நாள் விழா: வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
வ.உ.சி. பிறந்த நாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நெல்லை,
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பொருட்காட்சி திடலில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி, பயிற்சி உதவி கலெக்டர் இளம்பகவத், தாசில்தார் கணேசன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் விஜிலாசத்யானந்த் எம்.பி. தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர்முத்தையா, அமைப்பு செயலாளர்கள் ஆர்.பி.ஆதித்தன், கல்லூர் வேலாயுதம், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.சி.ராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, பால் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முன்னாள் பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் மாநகராட்சி முன்பு இருந்து ஊர்வலமாக மணிமண்டபத்திற்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.கா. சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதீய ஜனதா கட்சியினர் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் விவசாய அணி பொதுச் செயலாளர் கணேஷ்குமார்ஆதித்தன், நெல்லை மண்டல தலைவர் வேல் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியினர் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினர் துணை பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் மாநகர் மாவட்ட செயலாளர் ரவிதேவேந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் நெல்லையப்பன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சைவ வேளாளர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக சுதேசி மக்கள் இயக்கத்தினர் பந்தல் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு அனைத்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை, சரித்திர நாயகன் வ.உ.சி. நலப்பேரவையினர் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், மனக்காவலம்பிள்ளை பூங்கா ஆகிய இடங்களில் உள்ள வ.உ.சி.சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story