நாகர்கோவிலில் விசுவ இந்து பரி‌ஷத் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் விசுவ இந்து பரி‌ஷத் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:15 AM IST (Updated: 6 Sept 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் விசுவ இந்து பரி‌ஷத் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் தேரேகால்புதூர் சந்திப்பில் உள்ள விநாயகர் கோவில் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அதிகாரிகள் அகற்ற முயற்சிப்பதாகக் கூறியும், அதனை கண்டித்தும் குமரி மாவட்ட விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விசுவ இந்து பரி‌ஷத் மாவட்ட தலைவர் குமரேசதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் குழைக்காதர், திருமடங்கள் மாநில அமைப்பாளர் காளியப்பன், மாவட்ட அமைப்பாளர் ராமமனோகரன், பா.ஜனதா ராஜன், மணிசாமி, கிருஷ்ணன், இந்துக்கோவில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நாஞ்சில் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story