கலபுரகி அருகே தலித் மக்கள் குடிநீர் எடுக்கும் கிணற்றில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பு
கலபுரகி அருகே தலித் மக்கள் குடிநீர் எடுக்கும் கிணற்றில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலபுரகி,
கலபுரகி மாவட்டம் ஜீவர்கி தாலுகாவில் சென்னூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு குழாய் மூலம் கிராம பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அதிகளவு தண்ணீர் தேவையால் இந்த கிராமத்து மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை கிணறுகளில் இருந்தும் எடுத்து வந்தார்கள். கிராமத்தை சுற்றியுள்ள 8 கிணறுகளில் உள்ள தண்ணீர் குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில், 7 கிணறுகளில் இருந்து தலித் மக்களுக்கு தண்ணீர் எடுக்க அந்த பகுதியில் வசித்து வரும் சிலர் அனுமதிக்கவில்லை.
இதனால், மீதமுள்ள ஒரு கிணற்றில் இருந்து தலித் மக்கள் தண்ணீர் எடுத்து தங்களின் தாகத்தை தீர்த்து வந்தார்கள். இந்த நிலையில், தலித் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் கிணற்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கொல்லலாபாகவுடா கல்லப்பா கவுடா குகனூர் என்பவர் அவர்களை கிணற்று தண்ணீரை எடுக்க அவ்வப்போது அனுமதிப்பது இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்ப்பை மீறி தலித் மக்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை தலித் மக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கிணற்றில் ‘எண்டோசல்பான்’ (பூச்சிக்கொல்லி) மருந்து கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அந்தப்பகுதி தலித் மக்கள் கடும் கோபமடைந்தனர். இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் சம்பவம் குறித்து கலபுரகி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு உல்லாரிடம் புகார் செய்தனர்.
அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு உல்லார் மற்றும் தாசில்தார் சுபேதார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்று தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்போது, கிணற்று தண்ணீர் குடிநீருக்கு ஏற்றதாக இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, தாசில்தார் உத்தரவின்பேரில் உடனடியாக கிணற்றில் இருந்து முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும், இதுபற்றிய புகாரின்பேரில் ஜீவர்கி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தலித் மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்க கிணற்றில் ‘எண்டோசல்பான்‘ கலக்கப்பட்டு உள்ள சம்பவம் கலபுரகியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story