நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 3:55 AM IST (Updated: 6 Sept 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் காரைக்காலில் நேற்று மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

நீட் தேர்வு பிரச்சினையால் தற்கொலை செய்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் காரைக்காலில் நேற்று அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுளுக்கு எதிராகவும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து மாணவர்கள் கூறும்போது, மத்திய, மாநில அரசுகள் புதிய கல்வி திட்டத்தை அறிவித்து, அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் இங்கு மத்திய அரசு கல்வி திட்டத்தை செயல்படுத்தினால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறினார்கள்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதா உருவப்படத்தை பிடித்தபடி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த கோரிக்கைகளுக்காக நாளை (வியாழக்கிழமை) முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Next Story