செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட்


செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:15 PM GMT (Updated: 6 Sep 2017 6:50 PM GMT)

செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் சேரனுக்கு பிடிவாரண்ட் பரமக்குடி கோர்ட்டு உத்தரவு.

பரமக்குடி,

பரமக்குடியை சேர்ந்த ரகு என்பவரிடம், திரைப்பட இயக்குனர் சேரன் திரைப்பட சி.டி.க்களை விற்பனை செய்யும் உரிமம் வழங்குவதற்காக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அதன்படி சி.டி.க்கள் விற்பனை செய்யும் உரிமம் வழங்கவில்லை. இதனால் ரகு, தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சேரன், பணத்திற்கு பதிலாக செக் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த செக்கை ரகு வங்கியில் செலுத்தியபோது, அதில் பணம் இல்லை என்று திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து கேட்டபோது சேரன் பதில் ஏதும் கூறவில்லை.

இதனால் செக் மோசடி செய்துவிட்டதாக சேரன் மீது பரமக்குடி குற்றவியல் கோர்ட்டில் ரகு வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு விசாரணைக்காக ஆஜராக உத்தரவிட்டும், தொடர்ந்து 10 முறை சேரன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்தநிலையில் வழக்கின் விசாரணை நேற்று நீதிபதி பிரசாந்த் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


Next Story