நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ–மாணவிகள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி,

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத சோகத்தில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். எனவே அவரின் தற்கொலைக்கு காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் 2–வது நாளாக கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவ–மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோ‌ஷம் எழுப்பியப்படி கல்லூரி வளாகத்திற்கு முன் வந்தனர். பின்னர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் திரளான மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று பொள்ளாச்சி– கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியிலும் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக்கு நுழைவு வாயில் பகுதியில் உட்கார்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மாணவ–மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் ஜல்லிக்கட்டுக்காக மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். எனவே நீட் தேர்வுக்கு எதிராக மாணவ–மாணவிகள் அங்கு கூடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story