கீழடியில் அகழாய்வு பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


கீழடியில் அகழாய்வு பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Sept 2017 5:00 AM IST (Updated: 7 Sept 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை சேர்ந்த வக்கீல் கனிமொழி மதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வில் பழமையான 5,300 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப

மதுரை,

சென்னையை சேர்ந்த வக்கீல் கனிமொழி மதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழாய்வில் பழமையான 5,300 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. ஆனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் தான் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. கீழடியில் அகழவாய்வு பணியை தொடரவும், பழங்கால பொருட்களை அங்கேயே அருங்காட்சியம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் கனிமொழி மதி ஆஜராகி, ‘‘கீழடியில் அகழாய்வு நடைபெற்று வரும் இடம் மழைநீரால் நிரம்பியுள்ளது. அகழாய்வு நடைபெறும் இடத்திற்குள் தண்ணீர் புகாதவாறு பாதுகாக்க வேண்டும். மேலும் முந்தைய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களையும் மழைநீரில் இருந்து பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதாடினார்.

பின்னர் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் ஆஜராகி, ‘‘அகழாய்வு மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட லைசென்சு இந்த மாதத்துடன் முடிகிறது. இங்கு கண்டுடெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பாதுகாப்பாக வைக்க அங்குள்ள சமுதாயக்கூடத்தை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

விசாரணை முடிவில், ‘அகழாய்வு பகுதிக்கு நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், பழங்கால பொருட்களை பாதுகாப்பாக வைக்க சமுதாயக்கூடத்தை வழங்குவது தொடர்பாகவும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்க அரசு வழங்கியுள்ள இடத்தை கூடுதல் அட்வகேட் ஜெனரல், மத்திய அரசு வக்கீல் ஆகியோர் பார்வையிட்டு அங்குள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 11–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story