அரசுக்கு எதிராக வாக்களித்த “ஓ.பி.எஸ்.க்கு ஏன் கொறடா நோட்டீஸ் அனுப்ப வில்லை” தங்கத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கேள்வி
மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை,
மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் தங்கத்தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கவர்னரிடம் நாங்கள் வைத்துள்ளோம். இது தொடர்பாக கவர்னரை நாளை சந்திக்க உள்ளோம். எங்களது 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதாக எங்களுக்கு கொறடா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த முறை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஏன் நோட்டீஸ் அனுப்ப வில்லை. இதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். பயத்தின் காரணமாகவே ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் இணைந்துள்ளணர். நாளை கவர்னரை சந்தித்த பிறகு நல்லதொரு பதிலை கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story