மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
ராசிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் பக்கமுள்ள கவுண்டம்பாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் கார்த்திக் (வயது 29). தனியார் கம்பெனி விற்பனையாளர். கடந்த 2-ந் தேதி காலையில் நடைபயிற்சிக்காக ராசிபுரம் நகரில் உள்ள அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு சென்றார்.
அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை பள்ளிக்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபற்றி அவர் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
ஆசிரியர்
ராசிபுரம் அருகேயுள்ள அரமத்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். (46). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலையில் அவரது மோட்டார் சைக்கிளை ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் உள்ள ஆவின் பால்பூத் அருகே நிறுத்திவிட்டுச் சென்றார்.
பணி முடிந்ததும் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுபற்றி அவர் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்களை தேடிவந்தார்.
3 பேர் கைது
ராசிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் டிராவல்ஸ் புக்கிங் ஏஜெண்ட் சரவணன் (34). நேற்று முன்தினம் ராசிபுரம் புதிய பஸ்நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே நிறுத்தியிருந்த இவரது மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்குகளில் 3 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஆத்தூர் தாலுகா சிறுவாச்சூர் அம்மன் நகரைச் சேர்ந்த ரவி என்கிற ரவிக்குமார் (37), ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டி வன்னியர் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (32), ராசிபுரம் காட்டூர் ரோடு பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (30) ஆகிய 3 பேரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.

Related Tags :
Next Story