பாரதிதாசன் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குரும்பலூர் பாரதி தாசன் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவர்கள் சிலர் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலி யுறுத்தி போராட்டம் நடத்த நேற்று வெளியே வந்து வளாகத்தில் நின்றனர். அப்போது நுழைவு வாயிலுள்ள இரும்பு கேட்டை கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் காவலாளி இழுத்து பூட்டினார். இதனால் கல்லூரிக்கு வெளியே வர முடியாததால் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினர். எனினும் கல்லூரி வகுப்புகள் எப்போதும் போல நடந்தன. போராட்டத்தில் பங்கேற்காத மாணவ, மாணவிகள் பக்கவாட்டு நுழைவு வாயில் வழியாக கல்லூரிக்கு சென்ற வண்ணம் இருந்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், மாலதி உள்பட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Related Tags :
Next Story