தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை-கட்டுரை போட்டிகள் 15-ந்தேதி நடக்கிறது
அரியலூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை போட்டிகள் 15-ந்தேதி நடக் கிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள் மற்றும் பேச்சு போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்வளர்ச்சி துறையின் மூலமாக கல்லூரிகளுக்கு போட்டியில் பங்கேற் பதற்கான படிவம் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மூன்று போட்டிகளுக்கும் மூன்று மாணவர்களை மட்டுமே கல்லூரி முதல்வர்கள் பரிந்துரை செய்து அனுப்பிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள பரிந்துரை கடிதம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் போட்டி நாளன்று போட்டி நடை பெறும் இடத்தில் காலை 9 மணிக்கு தங்கள் வருகை பதிவு செய்திட வேண்டும். கவிதைப்போட்டி காலை 10 மணிக்கும், கட்டுரை போட்டி பகல் 12 மணிக்கும், பேச்சுப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
பரிசு-சான்றிதழ்
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் சேர்த்து சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் முதல் பரிசு தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர் களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.12 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படியும் வழங்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை கல்லூரி மாணவ, மாணவிகள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story