நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி கீழ்வேளூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து, தேவூர் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோதிபாஸ், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். முன்னதாக மாணவ- மாணவிகள் வகுப்பை புறக்கணித்து பேரணியாக தேவூர் கடைத் தெருவிற்கு வந்தனர். இதில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story