திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:15 AM IST (Updated: 7 Sept 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் பஸ் நிலையம் அருகில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். வாகன ஓட்டுனர்கள் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாவார்கள். எனவே தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ தொழிற் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் பழனிவேல், ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அனிபா, மாவட்ட பொருளாளர் வாஞ்சிநாதன், நிர்வாகி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story