அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்


அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:30 AM IST (Updated: 7 Sept 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் அறிஞர் அண்ணா கலை கல்லூரி உள்ளது. இங்கு 1,300 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர்.

 காலை 10 மணியளவில் வகுப்புகள் தொடங்கும் வேளையில் திடீரென்று மாணவ–மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர். பின்னர், அவர்கள் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள், “ரத்து செய், ரத்து செய் ‘நீட்’ தேர்வை ரத்துசெய்,  நியாயம் வழங்கு நியாயம் வழங்கு அனிதாவின் மரணத்திற்கு நியாயம் வழங்கு’’ என்று கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த போராட்டம் 1 மணிநேரம் நீடித்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து கல்லூரியை விட்டு வெளியே சென்றனர்.


Related Tags :
Next Story