மாதந்தோறும் ஊதியம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஊர்வலம்


மாதந்தோறும் ஊதியம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 7 Sept 2017 4:21 AM IST (Updated: 7 Sept 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

மாதந்தோறும் ஊதியம் வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

ஊழியர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தொடர்ந்து ஊதியம் வழங்கிட வேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், அரசு நிர்ணயித்துள்ள தினக்கூலி ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 9–வது நாளாக நீடித்தது. இதையொட்டி நேற்று காலை புதுவை சட்டசபை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர்.

இதற்காக புதுவை சுதேசி மில் அருகே கூடிய அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். சங்க பொதுச்செயலாளர் முத்துராமன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிசேகம், செயலாளர் சேதுசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மி‌ஷன் வீதி வழியாக ஊர்வலம் வந்தது. ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அதற்கு மேல் செல்லவிடாமல் போலீசார் அவர்களை தடுத்தனர். இதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்கள் அங்கேயே தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சட்டசபைக்கு சென்றனர். அங்கு முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி மனு கொடுத்தனர்.


Next Story