மாமல்லபுரம் கடலில் மூழ்கிய வாலிபர் உடல் கரை ஒதுங்கியது


மாமல்லபுரம் கடலில் மூழ்கிய வாலிபர் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 7 Sept 2017 4:54 AM IST (Updated: 7 Sept 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம், பொத்தேரியை சேர்ந்தவர் விஜய் (வயது 19). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

மாமல்லபுரம்,

இவர் தனது நண்பர் கார்த்திக் (20) என்பவருடன் கடந்த திங்கட்கிழமை மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்த நண்பர்கள் இருவரும் கடலில் குளித்தனர்.

அப்போது 2 பேரும் ராட்சத அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதில் சில மணி நேரத்தில் விஜய் உடல் கரை ஒதுங்கியது. மாயமான கார்த்திக் உடலை கடலோர காவல் படை உதவியுடன் மாமல்லபுரம் போலீசார் கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தேவனேரி கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் கார்த்திக் உடல் கரை ஒதுங்கியது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்த கார்த்திக், சென்னை தி.நகரில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.


Next Story