‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்,

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4-ந் தேதி முதல் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறி வியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து, அவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் ‘நீட்’ தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விழுப்புரம் இ.எஸ். கல்லூரி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரி, கப்பியாம்புலியூர் சிகா கல்லூரி, அரசூர் வி.ஆர்.எஸ். கல்லூரி, விழுப்புரம் நடராஜா ஐ.டி.ஐ., விழுப்புரம் பாரதி நர்சிங் அண்ட் கேட்டரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விழுப்புரம் ஜங்ஷன் முகநூல் நண்பர்கள் ஆகியோர் கலந்து ஈடுபட்டனர்.

Next Story