தென்மேற்கு பருவமழை தீவிரம்: இடி, மின்னலின் போது டி.வி., செல்போனை தவிர்க்க வேண்டும்
கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இடி, மின்னலின்போது பொதுமக்கள் டி.வி., செல்போனை தவிர்க்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி பெய்த கனமழையின்போது, கோவை சிங்காநல்லூர் பகுதியில் வீட்டில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து நிமிலன் என்ற 4 வயது சிறுவன் இறந்தான்.
இதனால் மழை காலங்களில் மின் விபத்துகளில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும்? என்பது குறித்து கோவை மாநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்பு மின் ஒயர்களை உரசும் வகையில் நிற்கும் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்ற நினத்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் வந்து, அந்த பகுதியில் செல்லும் மின்சாரத்தை நிறுத்திய பின்பு மரங்களின் கிளைகளை வெட்டவேண்டும்.
மழை பெய்யும்போது மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்), மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது. வீட்டில் உள்ள குளிர்பதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை தொடும்போது மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே ஈரமில்லாத ரப்பர் காலணிகளை அணிந்துகொண்டு மெயின் சுவிட்சை ஆப் செய்யவேண்டும். பின்னர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான இடத்தில் மின் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. வீட்டின் அருகில் உள்ள மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கயிறு கட்டி துணிகளை காயப்போடக்கூடாது. இடி மற்றும் மின்னலின்போது, மின் கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலிகள் இல்லாத தாழ்வான பகுதியில் நிற்கவேண்டும்.
மேலும் அந்த நேரம் டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மின் கம்பி அறுந்து கிடந்தால் அதன் மீது மிதிக்காமலும், தொடாமலும் இருக்கவேண்டும்.
குழந்தைகள் தெரியாமல் அந்த கம்பிகளில் மிதிக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். மின் கம்பிகள் அறுந்துகிடப்பது குறித்து உடனே அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். நீங்களாக முன்வந்து அதனை அப்புறப்படுத்த முயற்சிசெய்யக்கூடாது.
புதிதாக வீடுகட்டுபவர்கள் கட்டிடங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையே போதிய இடைவெளி இருக்கும் வகையில் கட்டிடங்களை அமைக்கவேண்டும். மின்கம்பங்களை பந்தல் அமைப்பதற்காகவும், விளம்பர பலகை வைப்பதற்காகவும் பயன்படுத்தக்கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளின் அருகில் வைத்து பொருட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது. திறந்தவாறு இருக்கும் ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்க வேண்டாம். அதனை விட்டு கொஞ்சம் விலகி நிற்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகளை ஆன்-ஆப் செய்யக்கூடாது. மின்சாரத்தினால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்யக்கூடாது. கால்நடை வளர்ப்பவர்கள் மின்கம்பத்தில் தங்கள் கால்நடைகளை கட்டிவைக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story