ஒரு வயது ஆண் குழந்தையின் இருதயம் நவிமும்பை சிறுமிக்கு பொருத்தப்பட்டது


ஒரு வயது ஆண் குழந்தையின் இருதயம் நவிமும்பை சிறுமிக்கு பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 Sept 2017 2:44 AM IST (Updated: 8 Sept 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

சூரத்தை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை சோம்னாத். இவன் கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டில் விளையாடி கொண்டு இருந்தான்.

மும்பை,

சூரத்தை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை சோம்னாத். இவன் கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தான். இதில் அவனது தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவனது பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதில் அவனது சிறுநீரகம் ஆமதாபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. இதேபோல அவனது இருதயம் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3½ வயதான கலம்பொலியை சேர்ந்த சிறுமிக்கு பொருத்தப்பட்டது.

Next Story