மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்


மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திருச்சி,

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற கோரியும், தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி எஸ்.சி-எஸ்.டி ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு எஸ்.சி-எஸ்.டி அலுவலர் நலசங்க பொதுச்செயலாளர் திலகர் முன்னிலை வகித்தார். மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் மாநில இணைச்செயலாளர் பிரபாகரன், சேவியர் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story