காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்யக்கூடாது தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்யக்கூடாது தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றம் செய்யக்கூடாது தொழிற்சங்கங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட், போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மத்திய வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும், காந்திமார்க்கெட்டை மாற்றம் செய்யக்கூடாது என கோரியும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம், வெங்காய மண்டி சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, அகில இந்திய பார்வர்டு பிளாக், உருளை கிழங்கு மண்டி சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அருள், தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரபாகரன், ரெங்கராஜன், ராமர், ராமலிங்கம், தமிழ்மாறன், முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். 

Next Story