புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு


புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் மீட்பு
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் மீட்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை தேவஸ்தான கோவில்களுள் ஒன்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான 235 ஏக்கர் விவசாய நிலம் அருள்மொழிப்பேட்டை கிராமத்தில் உள்ளது. இந்த நிலங்களின் பயிர் சாகுபடி உரிமை அருள்மொழிப்பேட்டை கூட்டுறவு பண்ணை சங்கத்திடம் இருந்தது.

இந்த கூட்டுறவு சங்கம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 2003-ம் ஆண்டு திடீரென கலைக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ.60 லட்சம் நிலுவையாக இருந்து வந்தது. இதையடுத்து தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நிலம் மீட்பு

வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்றம் அருள்மொழிப்பேட்டை கூட்டுறவு பண்ணை சங்கம் நிலத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று 235 ஏக்கர் நிலத்தையும் அதிகாரிகள் மீட்டனர். வருவாய் நீதிமன்ற தனித்துணை கலெக்டர் மஞ்சுளா உத்தரவுபடி அமலாக்க வருவாய் ஆய்வாளர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர், கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நிலத்தை அளந்து அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் பரணிதரன் மீட்டார்.

பின்னர் உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், “கோவில் நிலத்தை மீட்டதன் மூலம் கோவிலுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை பாக்கி ரூ.60 லட்சம் வசூலாகவும், விவசாயிகளை நேரடி குத்தகைதாரர்களாக மாற்றவும் வழிவகை ஏற்பட்டுள்ளது”என்றார். அப்போது கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் சுரேஷ், வழக்கு ஆய்வாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story