10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 64 துறைவாரியான சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊதிய முரண்பாடுகளை கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

180 பேர் கைது

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வெளிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பாடததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 85 பெண்கள் உள்பட 180 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Related Tags :
Next Story