குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேப்பூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தோட்டி ஒன்று கட்டப்பட்டு, அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அங்கு வசிப்பவர்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் வேப்பூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் முன் அறிவிப்பின்றி தொடர் மின் வெட்டு ஏற்படுகிறது. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொசு தொல்லையால் சிரமப்படுகின்றனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வேப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேப்பூர்-குன்னம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆண்கள் காலி குடங்களுடன் சாலை யில் அமர்ந்திருந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார், ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பற்றாக்குறை இன்னும் 2 நாட்களில் சரி செய்யப்படும், என்று உறுதியளித்தனர்.
ஆனால் பொதுமக்கள், நீங்கள் சொல்வதை நாங்கள் நம்பமாட்டோம். எங்களுக்கு எழுத்து பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும், என்று கேட்டனர். இதையடுத்து வருவாய் துறையினர் ஒரு காகிதத்தில் எழுதி குடிநீர் மற்றும் தொடர் மின்வெட்டு சரி செய்யபடும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story