தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது


தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:00 AM IST (Updated: 8 Sept 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி 100 யாக குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இன்று(வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை நடந்தது. அதனை தொடர்ந்து நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி நடந்தது.

காலை 5.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானமும் அதன் பின்னர் கடம் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 6.45 மணி முதல் 7.45 மணி வரை பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

வசதிகள்

14 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளதால், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு டி.ஏ.திருமண மண்டபம், எஸ்.ஏ.வி. பள்ளி, சைவவேளாளர் மண்டபம் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் தூத்துக்குடி நகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வன்நாகரத்தினம் மேற்பார்வையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர். 

Next Story