அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 233 பேர் கைது
ஆலங்குளம், நாங்குநேரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 233 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு தலைமை தாங்கினார். ஜியோ ஒருங்கிணைப்பாளர் கங்காதரன், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் மோட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரவிகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் ராஜசேகரன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர் திருமலை கொழுந்து, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க வட்டார பொறுப்பாளர் சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதைத்தொடர்ந்து யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 119 பெண்கள் உள்பட 147 பேரை கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நான்கு வழிச்சாலை நோக்கி வந்து மறியல் போராட்டம் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 86 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story