6 மாதத்திற்குள் நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் அமைச்சர் தகவல்
6 மாதத்திற்குள் நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரூ.1 கோடியே 42 லட்சம் செலவில், பழைமையான மூலிகை ஓவியங்களை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை தமிழக இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் சுவாமி கோவில் கோபுரத்தின் உள்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள பிரகார அறைகளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மர வேலைபாடுகள் செய்யப்பட்டு மூலிகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் சிதிலமடைந்து வருவதை அறிந்து, 2014-ம் ஆண்டில் மூலிகை ஓவியங்களை தொண்மை மாறாமல் புனரமைப்பு செய்ய ரூ.1 கோடியே 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதனை ஆய்வு செய்துள்ளேன். விரைவில் இந்த பணி நிறைவடையும்.
மேலும், நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது, ரூ.1 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்னும் 6 மாதத்திற்குள் நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, உதவி கோட்ட பொறியாளர் செல்வராஜன், கோவில் செயல் அலுவலர் கனகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story