தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்: குழித்துறை தடுப்பு அணை வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல தடை
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தடுப்பு அணை வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்து கம்பியால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
களியக்காவிளை,
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது, மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக வெட்டுவெந்நி பகுதியில் தரைநிலை தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் சாலை முழுமையாக அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. எனவே, குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு அணை வழியாக இருசக்கர வாகனங்களும், பொதுமக்களும் வெட்டுவெந்நிக்கு வந்து சென்றனர்.
இந்தநிலையில், தற்போது மழை பெய்து வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வெள்ளம் தடுப்பு அணையை மூழ்கடித்தப்படி செல்கிறது. இதைதொடர்ந்து பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடுப்பு அணை வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால், களியக்காவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெட்டுவெந்நி வந்து செல்ல மிகவும் அவதியடைந்தனர். இதையடுத்து தற்போது, வெட்டுவெந்நி பாலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story