நீட் தேர்வுக்கு எதிராக மதுரை தமுக்கத்தில் மாணவ, மாணவிகள் போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் 91 பேரை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
மதுரை,
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதுரையிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து அனைத்து கல்லூரி, பள்ளிகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைந்து தமுக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டது போன்று, 8-ந் தேதி மாணவ, மாணவிகள் கூடி மாணவி அனிதாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து தமுக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை தமுக்கம் பகுதியில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அவர்கள் திடீரென்று அந்த சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் மாணவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதைத் தொடர்ந்து மாணவர்களில் ஒரு பிரிவினர் தமிழன்னை சிலை பகுதிக்கு வந்தனர். அவர்கள் சிலையின் பீடத்தில் ஏறி நின்று தமிழன்னையிடம் நீட் தேர்வு குறித்தும், மாணவி தற்கொலை குறித்தும் முறையிடுவது போன்று கோஷம் போட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் அந்த பீடத்தின் தூண்களை பிடித்து கொண்டு கீழே இறங்க மறுத்தனர்.
மாணவர்களை சிலையின் பீடத்தில் இருந்து இறக்க போலீசார் பெரும்பாடு பட்டனர். அப்போது போலீஸ்காரர்கள் வசந்தகுமார், நல்லுச்சாமி ஆகியோர் தமிழன்னை சிலையின் பீடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து தமுக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 48 பேரை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அடுத்தடுத்து தமுக்கம் பகுதியில் போராட்டங்கள் நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அங்கு போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி தமுக்கம் பகுதியில் நடைபெற்று வரும் புத்தகக்கண்காட்சி நேற்று மாலை வரை மூடப்பட்டது.
அதன் பின்னர் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து மாணவர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி காக்கை பாடியனார் பள்ளியில் படிக்கும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மறியலை கைவிடும்படி கூறினார்கள். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுப்பு தெரிவித்தனர். இதனால் போலீசார் மறியலில் ஈடுபட்ட 11 மாணவிகள் உள்ளிட்ட 43 பேரை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

Related Tags :
Next Story