அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 10 இடங்களில் சாலை மறியல் 989 பெண்கள் உள்பட 1,530 பேர் கைது
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு(ஜாக்டோ-ஜியோ) சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், பல இடங்களில் மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியல் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், முத்துராமன், அழகேசன் பாண்டி ஆகியோர் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தமிழரசன், செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் நோக்கி சென்றனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 166 பெண்கள் உள்பட 237 பேரை சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிவகங்கை எம்.ஜி.ஆர். சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்றோர் அமைப்பை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
காளையார்கோவில் சந்தை திடல் அருகே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் செய்த 153 பெண்கள் உள்பட 233 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் காரைக்குடி தேவர் சிலை, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 64 சங்கங்களை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டம் நடத்திய 275 பெண்கள் உள்பட 367 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று இளையான்குடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பெண்கள் உள்பட 84 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூரில் மறியலில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 121 பேரையும், சிங்கம்புணரியில் 109 பெண்கள் உள்பட 151 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டையில் மறியல் செய்த 54 பெண்கள் உள்பட 107 பேரையும், மானாமதுரையில் 102 பெண்கள் உள்பட 134 பேரையும், திருப்புவனத்தில் 36 பெண்கள் உள்பட 82 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 989 பெண்கள் உள்பட 1,530 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலும் முடங்கின. இதனால் அரசு அலுவலகங்களுக்கு சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளுக்காக வந்த பொதுமக்கள் காத்துக்கிடந்து ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. சில பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் விடுமுறை விடப்பட்டது.

Related Tags :
Next Story