ராஜபாளையத்தில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை


ராஜபாளையத்தில் பயங்கரம் கல்லால் தாக்கி வாலிபர் கொலை
x
தினத்தந்தி 8 Sept 2017 3:57 AM IST (Updated: 8 Sept 2017 3:57 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள மாயூரநாதசாமி கோவில் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காவி வேட்டி அணிந்திருந்த நிலையில் அவரது அருகே ரத்தக்கறையுடன் கல்லும் சட்டை ஒன்றும் கிடந்தது.கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. தகவல் அறிந்து வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு, சப்- இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவ இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். துப்புதுலக்க மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து ஒருகிலோ மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது.

கொலையுண்டவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் பணத்திற்காக கொலை நடந்ததா அல்லது மது அருந்தும் பொது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story