ஆரணிக்கு கடத்தப்பட்ட சென்னை சிறுமி அரசு டாக்டர் உள்பட பலருக்கு விருந்தாக்கிய கொடூரம்
சென்னையை சேர்ந்த சிறுமியை ஆரணிக்குக் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்ததாக அரசு மருத்துவர் உட்பட 4 பேர் மீது திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துப்புரவு பணி மேற்கொள்ளும் பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
9-ம் வகுப்பு படித்து வந்த தனது 15 வயது மகளை, உறவினரான சித்ரா என்ற பெண் ஒரு மாதத்திற்கு முன்பு கடத்திச் சென்று, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அரசு டாக்டர் உள்ளிட்ட பலருக்கு விருந்தாக்கியதாகவும், தனது மகளின் வாழ்க்கையை சீரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சிறுமியை சித்ரா, சுரேஷ் ஆகியோர் விபச்சார கும்பலிடம் விற்க முயன்றுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியை குமார் என்பவர் மீட்டு சென்னை அழைத்து வந்து அவரது தாயாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குடும்ப வறுமையை எடுத்துக் கூறி, துணிக்கடையில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்ற உறவினர் பெண் சித்ரா என்பவர், கோயம்பேட்டில் இருந்து ஆம்புலன்ஸ் வேனில் தன்னை கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்டு சிறுமி தெரிவித்தார். தனி வீட்டில் அடைத்து வைத்திருந்தாகவும், மயக்க ஊசி போட்டு அரசு மருத்துவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தியதாகவும் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.
திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கடத்தல், பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை காக்கும் பாக்சோ சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமியை கடத்திச் சென்று சீரழித்தவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆரணி விரைந்துள்ளனர்.

Related Tags :
Next Story