தூத்துக்குடியில் பட்டப்பகலில் துணிகரம்: இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


தூத்துக்குடியில் பட்டப்பகலில் துணிகரம்: இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2017 2:00 AM IST (Updated: 8 Sept 2017 6:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

எலக்ட்ரீசியன்

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் அருள் செல்வன் (வயது 37). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜெயமேரி (33). இவர் நேற்று காலையில் குழந்தைக்கு இட்லி வாங்குவதற்காக வீட்டுக்கு அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு இட்லி வாங்கிவிட்டு வீட்டுக்கு ரோடு ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

3 பவுன் நகை பறிப்பு

அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஜெயமேரியிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்துள்ளனர். திடீரென அவருடைய கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபர்களை பிடிக்க முயற்சித்துள்ளார். அவருடைய கையை தட்டி விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். ஆனாலும், அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து ஓடியுள்ளார். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை மின்னல் வேகத்தில் செலுத்தி தப்பி சென்று விட்டனராம்.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து அவர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த நகைபறிப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story