வெம்பக்கோட்டை பகுதியில் பலத்த மழை 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்


வெம்பக்கோட்டை பகுதியில் பலத்த மழை 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 9:55 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஏழாயிரம்பண்ணை தெப்பம் மற்றும் கங்கர்கோட்டை கண்மாய் நிரம்பின. வல்லம்பட்டி கண்மாய் மீண்டும் நிரம்பி வழிந்து உபரி நீர் வெளியேறியது. சிப்பிப்பாறை அருகே தரைப்பாலத்தில் அதிகமான தண்ணீர் சென்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று கொட்டிய மழையினால் ஊத்துப்பட்டி, ராமநாதபுரம், ரெட்டியாபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களும் நிரம்பியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் கண்மாய்களை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story