திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
திருப்பூர்,
மோட்டார் வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் நடைபெற்று வரும் பாலம் உள்ளிட்ட அனைத்து பாலங்களையும் உடனே கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் தொழிலாளர் சங்கம் சார்பில், ரெயில் நிலையம் அருகே உள்ள குமரன் சிலை முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மோட்டார் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மகேந்திரகுமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் என்.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story