குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் லோடு ஆட்டோ டிரைவர் தற்கொலை


குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் லோடு ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 9 Sept 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரவாயலை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 35). லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சின்னசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

பூந்தமல்லி,

தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சின்னசாமியை அவருடைய மனைவி ஏன் இப்படி குடித்து விட்டு வருகிறீர்கள்? என கண்டித்தார்.

இதனால் மனம் உடைந்த சின்னசாமி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை எழுந்து பார்த்த அவருடைய மனைவி, கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மதுரவாயல் போலீசார், சின்னசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story