வர்த்தகர்களை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தி உள்ளது
வர்த்தகர்களை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தி உள்ளது என்று விக்கிரமராஜா பேசினார்.
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். சீர்காழி வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாறு காணாத வறட்சியால் சென்னையில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். திண்டுக்கலில் வாரம் இருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 26-ந் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதில் மாநில துணை தலைவராக, சீர்காழி வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட உள்ளார்.
ஜி.எஸ்.டி. கணக்குகளை சமர்பிக்க 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் கணக்குகளை சமர்பிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் 200 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்களை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தி உள்ளது.
ஆனால், இந்த வரி தொடர்பாக டாடா, பிர்லா போன்றவர்களை மட்டுமே அழைத்து பேசி உள்ளனர். வறுத்த நிலக்கடலைக்கு 15 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்புக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உணவு பொருட்களான பர்கர், பீசா போன்றவற்றிற்கு 5 சதவீதமும், உள்நாட்டு உணவு பொருட்களுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே உள்நாட்டு வியாபாரிகளை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது என்பது தெரிகிறது.
ஒரு ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வியாபாரம் செய்தால் வருமான வரி கணக்கில் வந்துவிடும். அப்படி வந்தால் 300 சதவீதம் அபராதமும், ஜெயில் தண்டனையும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.20 லட்சம் வரை வரி கிடையாது என்பதை மாற்றி ரூ.50 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்க அனைத்து வியாபாரிகளும் தயாராக வேண்டும். 60 வயது முடிந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விபத்துக்கள் ஏற்பட்டால் வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நிர்வாகிகள் துரைராஜன், ஹரக்சந்த், கியான்சந்த், அன்வர்அலி, செயற்குழு உறுப்பினர்கள் சோலை, தமிழ்ச்செல்வம், சாமிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story