டாக்டர் மீது தாக்குதல் நடத்திய வக்கீல்களை கைது செய்யக்கோரி பணியாளர்கள் சாலை மறியல்
குளித்தலை அரசு மருத்துவமனையில் டாக்டர் மீது தாக்குதல் நடத்திய வக்கீல்களை கைது செய்யக்கோரி பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 38). வக்கீலான இவர் நேற்று தனது வீட்டில் இருந்து குளித்தலையை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பாண்டியன்(40) என்பவர் நீலமேகத்திற்கு முதலுதவி சிகிச்சை செய்துவிட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார். அப்போது நீலமேகத்திற்கும், டாக்டர் பாண்டியனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீலமேகம் மற்றும் அவருடன் இருந்த வக்கீல்கள், டாக்டர் பாண்டியனை மருத்துவமனைக்குள்ளேயே சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதை பார்த்த பொதுமக்கள், நோயாளிகள் அவர்களை தடுத்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். டாக்டர் பாண்டியன் தாக்கப்பட்டதை அறிந்த பணியில் இருந்த மற்ற டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணிகளை புறக்கணித்து டாக்டர் பாண்டியனை தாக்கிய வக்கீல்களை கைது செய்யக்கோரி திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை வட்டாட்சியர் அருள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் டாக்டரை தாக்கிய அனைவரையும் போலீசார் கைது செய்யும் வரை எந்தவித பணிகளிலும் ஈடுபடமுடியாதென கூறி மருத்துவமனை முன்பு நின்றிருந்தனர். டாக்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் தங்கள் பணியை மேற்கொள்ள சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நீலமேகம், டாக்டர் பாண்டியன் தன்னை தாக்கிவிட்டதாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் டாக்டர் பாண்டியன், வக்கீல் நீலமேகம் மற்றும் அவருடன் இருந்த சில வக்கீல்கள் தன்னை தாக்கி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story