நடிகை ராணி முகர்ஜியின் பங்களா வீடு கட்டுமான பணிக்கு தடை


நடிகை ராணி முகர்ஜியின் பங்களா வீடு கட்டுமான பணிக்கு தடை
x
தினத்தந்தி 9 Sept 2017 3:44 AM IST (Updated: 9 Sept 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஜூகு பகுதியில் பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி பங்களா வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.

மும்பை,

மும்பை ஜூகு பகுதியில் பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி பங்களா வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமான பணிகள் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி மாநகராட்சி சார்பில் ராணி முகர்ஜிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை தொடர்ந்து பங்களா கட்டுமான பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக நடிகை ராணி முகர்ஜியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Next Story