பாழடைந்த கட்டிட விவகாரம் மறுசீரமைப்பு விதிமுறையில் திருத்தம் செய்யப்படும்


பாழடைந்த கட்டிட விவகாரம் மறுசீரமைப்பு விதிமுறையில் திருத்தம் செய்யப்படும்
x
தினத்தந்தி 9 Sept 2017 3:51 AM IST (Updated: 9 Sept 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பெண்டி பஜாரில் 117 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 மாடி கட்டிடம் சமீபத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 30–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

மும்பை,

மும்பை பெண்டி பஜாரில் 117 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 மாடி கட்டிடம் சமீபத்தில் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 30–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதுபோன்ற கட்டிட விபத்துகளை எதிர்காலத்தில் தடுக்கும் பொருட்டு, கட்டிட மறுசீரமைப்பு விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்தார். இந்த சட்ட திருத்தப்படி, பாழடைந்த கட்டிடங்களில் வசித்து வருபவர்களில் 51 சதவீதத்தினர் வெளியேறும்பட்சத்தில், மீதம் இருப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.


Next Story