நாமக்கல்லில் வேனுக்குள் பிணமாக கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர் போலீசார் விசாரணை
நாமக்கல்லில் வேனுக்குள் டிராவல்ஸ் உரிமையாளர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் நேற்று காலை நின்று கொண்டிருந்த ஒரு வேனுக்குள் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வேன் அருகே திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து பாலசுப்பிரமணி என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் புதன்சந்தை அருகேயுள்ள உடுப்பம், நவமங்களத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சபரிராஜ் (வயது 45) என்பதும், அவரே வேனை ஓட்டி வந்ததும், நேற்று முன்தினம் காலை முதல் அந்த வேன் திருச்செங்கோடு சாலையிலேயே நின்று கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சபரிராஜிக்கு திருமணமாகி நம்பிக்கை மேரி என்ற மனைவியும், ஹரிதிவாகர், பிரவீன்குமார் என 2 மகன்களும் உள்ளனர்.
குடும்பத்தகராறு காரணமாக சபரிராஜ் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தகராறு காரணமாக சபரிராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story