தேனீக்களுடன் ஒரு கின்னஸ் சாதனை!


தேனீக்களுடன் ஒரு கின்னஸ் சாதனை!
x
தினத்தந்தி 9 Sept 2017 1:09 PM IST (Updated: 9 Sept 2017 1:09 PM IST)
t-max-icont-min-icon

ஜுவான் கார்லோஸ் நோகஸ் ஒரிட்ஸ் என்பவர், அதிக நேரம் தனது முகத்தில் தேனீக்களுடன் இருந்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

கனடாவின் டொராண்டோவில் சமீபத்தில் இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

டொராண்டோ கூக்ஸ் டவுனில் உள்ள டிக்கி தேன் பண்ணையில் பணிபுரியும் ஊழியரான ஒரிட்ஸ், தேனீக்களால் தாடி ஒன்றை உருவாக்கி அதனுடன் 61 நிமிடங்கள் இருந்துள்ளார். யங் மற்றும் டன்டாஸ் சதுக்கத்தில் அவர் இச்சாதனையைப் புரிந்தார். முந்தைய சாதனையான 53 நிமிடங்கள் 34 வினாடிகளை அவர் முறியடித்துள்ளார்.

இந்த சாகசத்துக்குத் தேவையான தேனீக்களை தேனீ வளர்ப்பு நிபுணரான பீட்டர் டிக்கி வழங்கியிருக்கிறார்.

சுமார் ஒரு லட்சம் தேனீக்கள் பயன் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படு          கிறது. 

‘பிளட் ஹனி’ என்ற திரைப்படத்துக்காக தேனீக்களை டிக்கியின் பண்ணை வழங்கியது. அதை விளம்பரப்படுத்தும் நோக்கிலும் மேற்கண்ட தேனீ சாதனை மேற்கொள்ளப்பட்டது. 

கனடாவில், குறிப்பிட்ட படம் வெளியாகும் திரையரங்குகளில் இந்த தேனீ சாதனை காட்சிகளும் திரையிடப்பட்டன.

Next Story