கொருக்குப்பேட்டையில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி


கொருக்குப்பேட்டையில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 10 Sept 2017 4:00 AM IST (Updated: 10 Sept 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டையில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ராயபுரம்,

சென்னை கொருக்குப்பேட்டை சிகிரிந்தபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சூரியபிரகாஷ் (வயது 19). இவர், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வந்தார்.
நேற்று காலை சூரியபிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளில் கொருக்குப்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சூரியபிரகாஷ் மீது டேங்கர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கி அவர், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சூரியபிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டேங்கர் லாரி டிரைவரான திண்டுக்கல்லை சேர்ந்த பழனி (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story