இளம் பெண், வி‌ஷம் குடித்து சாவு மாமனார் உள்பட 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை


இளம் பெண், வி‌ஷம் குடித்து சாவு மாமனார் உள்பட 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 10 Sept 2017 4:00 AM IST (Updated: 10 Sept 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே வடக்கு வாணவக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ். இவரது மனைவி அமுதா.

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே வடக்கு வாணவக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ். இவரது மனைவி அமுதா(வயது 27). இவர்களுக்கு இளவரசன்(8). இந்த நிலையில் ரமேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து இவர்களது குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக அவ்வபோது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், அமுதா வீட்டில் வைத்து வி‌ஷத்தை குடித்ததாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமுதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அமுதாவின் தந்தை ஆறுமுகம் சின்னசேலம் போலீசில் தனது மகளின் சாவுக்கு அவருடைய மாமனார் ராமலிங்கம், மாமியார் பேச்சாயி மற்றும் ராமலிங்கத்தின் மகன் ராஜேந்திரன், ராஜேந்திரனின் மனைவி சங்கீதா, சங்கர், சங்கரின் மனைவி தேவதர்ஷினி ஆகியோர் தான் காரணம் என்று கூறி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராலிங்கம், ராஜேந்திரன், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story