மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது


மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2017 3:45 AM IST (Updated: 10 Sept 2017 2:46 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் லாரியில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரித்தபோது, அந்த லாரியில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவர்களிடம் இருந்து, மணலை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் தொட்டியம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமியை (வயது 26) கைது செய்தனர். 

Next Story