15 ஆண்டுகளுக்கு பிறகு மார்கண்டேய நதியில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் விவசாயிகள் மகிழ்ச்சி
15 ஆண்டுகளுக்கு பிறகு மார்கண்டேய நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியமானது ஆந்திரா - கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கர்நாடகா மாநில எல்லையான முத்தியால்மடுகு என்ற மலைப்பகுதியில் இருந்து வரும் நீர், மார்கண்டேய நதியாக செல்கிறது. இந்த நதிக்கு ஆந்திரா மாநில எல்லையான ஓ.என்.புதூரில் இருந்து திம்மம்மா ஏரி வழியாகவும் தண்ணீர் வந்து சேருகிறது.
மார்கண்டேய நதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீர்த்தம், பாலனப்பள்ளி, சிங்கரிப்பள்ளி வழியாக மாரசந்திரம் தடுப்பணையை வந்தடைகிறது. அங்கிருந்து மாரசந்திரம், ஜீனூர், கொரல்நத்தம், ஜிங்கலூர், வீரோஜிபள்ளி வழியாக கல்லுகுறிக்கு வந்து, அங்கிருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரியை வந்தடைகிறது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டதாலும், ஆற்றில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதாலும் நீர் வற்றி, அந்த பகுதிகள் வறண்டு காணப்பட்டது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது. மார்கண்டேய நதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட படேதலாவ் ஏரி கால்வாய் திட்டமும் பயனற்று போய் விட்டது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு மார்கண்டேய நதியில் நேற்று தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதை அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்கிறது. அதே போல மார்கண்டேய நதி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வந்துள்ளது. மார்கண்டேய நதி பாசன பகுதியில் உள்ள விவசாயத்தை காப்பாற்ற அப்பகுதியில் மணல் அள்ளப்படுவதை முற்றிலுமாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story