7 கிராமங்களில் புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் அமைச்சர் திறந்து வைத்தார்
ஓசூர், சூளகிரி வட்டாரத்தில் 7 கிராமங்களில் புதிய பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டாரத்தில் பி.தட்டனபள்ளி. சானமங்கலம், பைரசந்திரம், சின்ன பேளகொண்டபள்ளி, மற்றும் பி.செட்டிப்பள்ளி, கதிரேபள்ளி, புன்னாகரம் ஆகிய 7 கிராமங்களில் புதிதாக பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட கலெக்டர் கதிரவன், அசோக்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-
நலத்திட்ட உதவிகள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய, பாமர மக்கள் நலன் கருதி விலையில்லா அரிசி மற்றும் குறைந்த விலையில் பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற உணவுப்பொருட்களை வழங்கி வந்தார். தற்போது அவரது வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அரசு உத்தரவுப்படி, தாய் ரேஷன் கடைகளை இரண்டாக பிரித்து, புதிதாக பகுதி நேர ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாடகை கட்டிடங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு, விரைவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அரசு, மக்களின் அரசு. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 20,000 பயனாளிகளுக்கு வீ்்ட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், பசுமை வீடுகள், விவசாய பயிர் கடன் ஆகிய நலத்திட்ட உதவிகளை, வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பகுதி நேர ரேஷன் கடைகளை, பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாண்டியன், துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் வேலாயுதம், சிவலிங்கம், சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏ.வி.எம். மது என்ற ஹேம்நாத், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி சிட்டிஜெகதீசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.சாக்கப்பா, ஜெயராம், பிரபாகர் ரெட்டி, தாசில்தார்கள் பூஷண்குமார், பெருமாள், வட்ட வழங்கல் அலுவலர்கள் செந்தில், சக்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story