அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் ஆணையர்களுக்கு கலெக்டர் உத்தரவு
தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆணையர்களுக்கு கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவிட்டார்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் சென்ற அவர், அங்கு மாணவர்களுக்கு உணவு வினியோகிக்கப்படும் சத்துணவு கூடத்தை பார்வையிட்டார். அப்போது தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
பின்னர் பள்ளி வகுப்பறைகள், பள்ளி ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களிடம் கல்வி தொடர்பான கேள்விகளை கேட்டறிந்து கலந்துரையாடினார். பின்னர் தொடர்புடைய ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் கல்வி கற்பிப்பதோடு அர்ப் பணிப்போடு செயல்படவேண்டும் என்றும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப் படும் சிகிச்சை முறைகள் குறித்தும், சித்த மருத்துவ பிரிவு மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை வசதி ஆகியவற்றை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து தர அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
உத்தரவு
இதனைத்தொடர்ந்து, குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சோழமாதேவியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் உதயநத்தம் கிராமத்தில் தெற்கு தெரு, காலனி தெருவில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது கட்டிட பணிகள் மற்றும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தா.பழூர் ஒன்றிய ஆணையர்கள் கலையரசன், ஜாகீர் உசேன் ஆகியோர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story