உப்பிலியபுரம் பகுதியில் பலத்த மழை: காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

உப்பிலியபுரம் பகுதியில் பலத்த மழை: காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
x
தினத்தந்தி 10 Sept 2017 4:00 AM IST (Updated: 10 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் பகுதியில் பலத்த மழை: காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக தளுகை ஊராட்சியில் உள்ள காட்டாறில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மழைநீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர் பெருக தொடங்கியுள்ளது. வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால், தண்ணீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் மூலம் ஓரளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Tags :
Next Story