எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டியை கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.

கரூர்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கரூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி கரூரில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பரிசுகள் வழங்கப்பட உள்ளது”.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓட்டப்பந்தயம்

ஆண்களுக்கு தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், பானை உடைத்தல், குழுப் போட்டிகளில் கபடி மற்றும் எறிபந்து போட்டிகளும், பெண்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், நடை போட்டி, கயிறு இழுத்தல், இசைநாற்காலி, பானை உடைத்தல், கபடி, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

இதில் கல்வி, வேளாண்மை, செய்தி மக்கள் தொடர்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் பாஸ்கரன், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வள்ளிராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story